பெம்மான்தந் தான்பிறவிப் பேறு - இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள் Poem by Dr.V.K. Kanniappan

பெம்மான்தந் தான்பிறவிப் பேறு - இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வரும்ஒளிம யம்! 1

இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வருமே ஒளி! 2

தன்னம்பிக் கைவெற்றிக் கேசாவி யாய்ஆகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3

தன்னம்பிக் கைவெற்றிக் கேதிறவு கோலாகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3a

முயற்சி திருவினை யாக்கும் அதனால்
செயும்உன் அடுத்த முயற்சி - பெயும்வெற்றி;
உன்பாதை என்றுமது எப்பொழுதும் ஒன்றல்ல;
உன்கொள்கை ஒன்றே குறி! 4

தொல்லைகள் என்றும் துவளவே வைக்குமன்றோ!
ஒல்லையில் உன்கொள்கை ஒன்றாய்வை - எல்லையிலா
நம்மிறைவன் ஆசி இயக்கும் உலகையே;
பெம்மான்தந் தான்பிறவிப் பேறு! 5

Ref:

Sonnet: For Success In Life - Poem by Dr John Celes dated 20.05.2015

This is a translation of the poem Sonnet: For Success In Life by Dr. A.Celestine Raj Manohar M.D.,
Wednesday, September 23, 2015
Topic(s) of this poem: life
POET'S NOTES ABOUT THE POEM
Hi,
This poem 'பெம்மான்தந் தான்பிறவிப் பேறு' is a translation of a Sonnet by Dr John Celes into Tamil classical poem as இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள் by me.

Sonnet: For Success In Life

Success in life does come not overnight;
An ambition and aim begin the try;
A sustained labor makes the future bright;
At times, despair could make you even cry.

Self-confidence is key to success prime;
A hasty mind can't make foray at all;
Correct your deficiencies all the time;
In others' court always, you keep the ball.

But emulate the good achieved by next;
The road you take is not the same always;
The problems cropping up can keep you vexed;
But you maintain that principled a base.

The grace of God dictates the things on earth;
God gave each one a purpose in the birth.

Copyright by Dr John Celes 20-05-2015
Dr. A.Celestine Raj Manohar M.D.,
COMMENTS OF THE POEM
Dr.V.K. Kanniappan

Dr.V.K. Kanniappan

Madurai, Tamil Nadu, India
Close
Error Success