ஆஹா....உதயசூரியன்..! Poem by jayashree shankar

ஆஹா....உதயசூரியன்..!

எழுமின்....எழுமின்....எழுமின்....
பசுமைக்காக ஒரு ஆரஞ்சுக்கோளம்
விடியலிலிருந்து மாலைவரை
மனிதர்களை ஆட்டுவிக்க
அனைத்துயிரையும் ஆசீர்வதித்து
கடக்கும் வழி நெடுகிலும்
எவரும் அறியாது
அறியவும் முயலாது
வியர்வைக்கு வருந்திடும் மனிதர்..!
இருந்தும் சில நல்லிதயங்கள்
தொழுவதற்கென எழுந்திருக்கும்
உணர்வுக்கும் உயிருக்கும் நன்றி சொல்ல
காலகாலமாய் அதையும் தாண்டியும்
இளமை கொண்டெழும் இளைய மகன்
எனது உதய சூரியன்...
நாற் திசை எங்கும் ஒளிச்சிதறல்
ஒரு திசையில் என்றும் தனி விடியல்
கருணைக்கு காது கொடுக்க
மனுவுக்கு கருணை கொடுக்க
வாரி வழங்கும் கருணை ஒளி
இறைவனுக்கே இறைவனாகி
கருணைக்கு சித்தராகி
ஆதித்ய ஹ்ருதயம் அருளிய
அகித்திய முனிவரின் தந்தையே
எந்தையே....அருணனே...!
யார் 'இன்று' எமக்குப் பரிசென
நித்தம் தந்தனையே...!


ஜெயஸ்ரீ ஷங்கர்

This is a translation of the poem Wow.....Rising Sun by jayashree shankar
Friday, February 5, 2016
Topic(s) of this poem: abc
POET'S NOTES ABOUT THE POEM
எனது முதல் கவிதை..!
COMMENTS OF THE POEM
Close
Error Success