Will There Be An End To Caste Discrimination And Honour Killing? Poem by Lion Rajmohan

Will There Be An End To Caste Discrimination And Honour Killing?

Rating: 5.0

இல்லாத சுதந்திரம்..
இருப்பதாய் எண்ணி..
இள வயதிலேயே
இல்லாது போய்விட்ட..
இளவரசனே! ! ! !

தீயிட்டு
தடுத்தாலும்
திரையிட்டு மறைத்தாலும்..
திடமுடன்
திவ்யாவை கரம் பிடித்தாய்! !


சொல்லாத
சோகங்கள்..
கொல்லாதுன்னை..
பொல்லாத மனிதர்களே..
கொன்றாரே யுன்னை! !

சாதியத்தின் பெயரால்..
சோதிடத்தின் பெயரால்..
கௌரவத்தின் பெயரால்..
மகளிரை மண்டியிட வைக்கும்..
மனித மந்தையில் ஏன்
மலர்ந்தேனென.. என்
மனம் உழலுது கேளிர்! !

யாதும் ஊரே..
யாவரும் கேளீர் எல்லாம்
மேல் சாதிக்கு மட்டும்தானா கூறீர்? !
மாற்றான் இனத்து
மங்கையை
கனவுகளில் கூட
காதலிக்க கூடாதென..
கட்டளையிடும்
கயவர் கூட்டம் பாரீர்! !

நரம்பில்லா
நாக்கை கொண்ட
கெடுமதியர்களின்
கொடுஞ்சொல்லும்
பழிச் சொல்லும்..
நாகராஜனை
நடை பிணமாக்கி..
பலி கொண்டது
பாழாய்ப்போன
உங்கள் சாதி அரசியல்தானே?

சாதிமறுப்பு திருமணத்தை
சகித்துக் கொள்ளாத
சாதுக்களின் (காட்டுமிராண்டி)
சதியாட்டதிற்கும்
களியாட்டத்திற்கும்..

நத்தம்
இரத்தம் சிந்தியதும்..

கொண்டம்பட்டி
தெண்டமாக்கப் பட்டதும்..

அண்ணா நகர்
சின்னா பின்னமாக்கப் பட்டதும்..

அதே உங்கள் சாதி அரசியல்தானே
மரக்காணத்தில் தினவெடுத்து
ஆடவைத்து
அடங்கிபோகச் செய்தது..
செல்வராசு, விவேக் இளந்தளிர்களை அன்று?
எதைக் கொண்டாடுகின்றீர் இன்று?

''பெரியார்'' மேட்டுப்பட்டி
சாதுக்களே ?
சர வெடி இனிப்பென
சாவைக் கொண்டாடும்
சாதி வெறியர் தமக்கு
புரியவில்லை..
மறைந்தது ஒரு
மனிதன் அல்ல.....
மானுடன் என்று! !

நாடகக் காதல் போராட்ட போலிப்போராளி
ஆறுமுகத்தின்
ஆணுறுப்பை
அறுத்தெறிந்த செல்வி போல்
உங்களை களைவதற்கு
ஆயிரம் செல்விகள் வேண்டுமோ?
மனம் மாற முயல்வீர்..
மனிதப் பதர்களே! !

சுதந்திர இந்தியாவில்
சாதிகளை களையோமென
சதி செய்த காந்தியின்
ஹிந்துத்வ பிரியத்துடன்
சமரசம் செய்தோமே..
சமத்துவம் கூட வேண்டாம்..
தனிப் பிரதிநிதித்துவம் வேண்டாம்..
தீண்டாமை மட்டுமாவது களைய..
திராணியுண்டா? ? இல்லை
தெரிந்து கொள்வோம்

கையுண்டு! !
நம்பிக்கையில்லை..
இவர்களிடத்தில் நீதி பெறுவோமென! !


கால் உண்டு - எம் துன்பத்திற்கு
வடிகால் இல்லை..

மக்கள் ஆட்சியுண்டு..
மனசாட்சி இல்லை..

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை
வங்கிப் பெட்டகத்தில் வைத்துவிட்டு
வன்முறைப் பேச்சாளர்களை
வளர்த்துவிட்ட
வல்லமை கொண்ட
வல்லரசு நாயகியே!

மூவாயிரம் பேர் திரண்டு..
மூன்று கிராம
குடிசைத் தீயில்..
கும்மாளமிட்டு
குளிர் காய்கையில்
கும்பகர்ணனாய்
தூங்கியவர்களே ! !
மர்மமாய்
மரணித்தவனுக்கு..
இறுதி ஊர்வலம்
செல்லக்கூடாதென
ஈரமற்று..
ஊரடங்கு
உத்தரவிடும்
உமக்கு
முகம் உண்டு..
முகாந்திரம் இல்லை..

அரசு வேலை தந்து
அரவணைக்க வேண்டிய அரசாங்கம்
அரசியல் செய்தது! ! ! ! !

நிதியுதவியளித்து
நிம்மதியுறச் செய்யாது
நிர்வாகம்
நிர்கதிக்குள்ளாக்கிட..


நீதிமன்ற வளாகத்திற்குள்ளும்
சாதிக்கட்சியின்
கட்டுப்பாட்டிற்குள்
காதலை அடமானம் வைத்து
கதறியவளை
மனிதாபிமானத்துடன்
மகளிர் காப்பகத்திற்கு
மனநல ஆலோசனைக்கும்
பரிந்துரைக்காது.......
சாதி வெறியர்களுடன் செல்ல
கணவனிடமிருந்து பிரித்த..
நடுநிலைமை தவறிய
நீதி தேவர்களே! ! ! ! ! !

காவு கொண்டீர்கள்
இளவரசனை.........

இன்னும் எத்தனை
இளவரசன்கள்
வேண்டும் உம்
இரத்த வேட்கை
அடங்க? ?

மனைவி மரணித்தால்
கணவனை கைது செய்ய சட்டமுண்டு; யாம் அறிவோம்!
கணவன் மரணித்தால் வைத்து
மனைவியை கைது செய்ய சட்டமுண்டோ?

உண்டெனில்
சிறையிலடையுங்கள் அவளை!
தண்டிப்பதற்காக அல்ல!

சாதி வெறியர்களின் அரசியலில் இருந்து
தனிமைப்படுததுங்கள்....இல்லையேல்
அப்புறப்படுத்துங்கள். அல்லது

அரசியல்வாதிகளுக்கு
வைப்பாட்டியாக்கி
கலவி கொள்வான்

கல்வி பயின்று
தன்னம்பிக்கையுடன் இவ்வுலகை எதிர் கொள்ளட்டும்




இணையப் பதிவுகளில், ,
கல்வியில்..
இட ஒதுக்கீடை எதிர்க்கும்
இந்துக்களின்
கவலையெல்லாம் தோனியின்
தசைப் பிடிப்பு பற்றியே! !

சமூக
ஆர்வலர் தம்
ஆதங்கத்தை
சாதிப் பெயரை ஒழிப்போம் என
சூளுரைப்பது..
வேரைச்சாடாமல் கிளையை சாடும்
விந்தையன்றோ பாரீர்! !

பெரியார் கேட்டதுபோல்
விழுங்கியதோ
கடப்பாறையை
கரைப்பதோ கஷாயம்கொண்டா? ?

சாதியை கட்டிக் காக்கும்
மதம், கடவுள் சிலைகளை
களையாமல்..
அவ்வமைப்புகளை
வளர்த்து விடும்
அரசுகளை
அப்புறப் படுத்தாமல்..
அருகில் வராது சமத்துவம் கேளிர்! !
கனிந்துவரும் காலமென..
காத்திருப்போம் கவலையுடன் வாரீர் ! !
அதுவரை...
தினம் தினம் இரையாகிக் கொண்டுதானிருப்பார்கள் பாரீர்..

ஒத்தவீடு (அலங்காநல்லூர்) பிரேம்குமார் -விஜயலட்சுமி
ஹரித்வாரமங்கலம் (திருவாரூர்) லக்ஷ்மிக் காக சிவாஜி..
காளையூரில் டேனியல் ராஜுக்காக (பரமக்குடி) திருச்செல்வி..
அழகாபுரியில் பத்ரகாளிக்காக (பழனி) ஸ்ரீ பிரியா..
பெரியார் நகர் (ஈரோட்டில்) செல்வலட்சுமிக்காக இளங்கோ..
வேங்கடம்பட்டியில் (தர்மபுரி) சுகன்யா..
ரெட்டியார்பாளையத்தில் (திருவண்ணாமலை) தேன்மொழிக்காக துரை..
பரத்தூர் (கடலூர்) கோபாலகிருஷ்ணன்..
சோழபுரம் (ராஜபாளையம்) விஜயலட்சுமி
மானமதுரை சிவகுமார-மேகலா..
கோவையில் சிற்றரசு..
எட்டியம்பட்டி (தர்மபுரி) முதலையன்..
புள்ளகாடுபட்டி (திண்டுக்கல்) சங்கீதா..
இன்று இளவரசன்..
நாளை? ? ? ? ? ? ? ? ?

POET'S NOTES ABOUT THE POEM
This poem expresses the distress caused due to the death of a Deprived caste youth who married an so called upper caste gal.Her caste politicians played a vital role to separate this couple and after a year long struggle he was dead suspiciously.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success