*அந்த எறும்பைப் பார் Poem by Subbaraman N V

*அந்த எறும்பைப் பார்

அந்த எறுமபைப் பார்
அதன் அழகைப் பார்!
எத்தனை சிறிய உருவம்?
அதற்கும் எத்தனை பருவம்!
எத்தனை வகை எறும்புகள்
எத்தனை எத்தனை அரும்புகள்!
உலகில் 22000 வகையாம்
அதற்கும் எத்தனையோ பகையாம்!
ஏன்? நானே அவற்றை அழித்திருப்பேனே
ஆனால் அது என்னை
எப்பொழுதாவது பழித்திருக்குமா?
அதன் ஆற்றலைப் பார்
வரிசை வரிசையாய்ச் செல்லும் ஒழுங்கைப் பார்!
அது கட்டும் வீட்டைப் பார்
அதில் சேர்த்துவைக்கும் உணவைப் பார்
மழைக் காலத்திற்குச் சேமிக்கும் அறிவைப் பார்!
அந்த எறும்பைப் பார்
அதன் அழகைப் பார்
அதன் அறிவைப் பார்
அதன் உழைப்பைப் பார்!
அதன் ஒழுங்கைப் பார்!
எறும்பைப் போல வாழ்வோம்
எளிமையாக வாழ்வோம்!
உழைத்தே வாழ்வோம்
உயர்ந்தே வாழ்வோம்!

Sunday, January 11, 2015
Topic(s) of this poem: Life
POET'S NOTES ABOUT THE POEM
Man has to learn alot from the ant, one of the smallest creations of God.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Subbaraman N V

Subbaraman N V

Karaikkudi - Tamilnadu- India
Close
Error Success