எப்பொழுதும்! Poem by Dr.V.K. Kanniappan

எப்பொழுதும்!

உன்னையும் என்னையும் ஒன்றாய்
நான் காண்கிறேன், எப்பொழுதும்!

மெத்தென்ற கடற்கரையில் நிதானமாக
வெறுங்காலுடன் நடந்து கொண்டே, எப்பொழுதும்!

நிலவொளியில் கைகளை ஒன்றாய்
இணைத்துப் பிடித்தபடியே, எப்பொழுதும்!

இரவின் நிசப்தத்தை இன்பமாக
ரசித்துக் கேட்டுக் கொண்டே, எப்பொழுதும்!

வாய்ச்சொற்கள் ஏதுமின்றி, ஆனாலும்
உரக்கப் பேசியபடியே, எப்பொழுதும்!

நம் இதயம் ஒரே லயத்தில் இசைத்து
நடனமாடிக் கொண்டே, எப்பொழுதும்!

ஒருவர் மற்றொருவரின் நெருக்கமான
இருப்பை உணர்ந்தபடியே, எப்பொழுதும்!

ஒருவர் மற்றொருவரின் கண்களோடு
கண்கள் கலந்தே, எப்பொழுதும்!

இவைகள் உண்மையில் நமதுதானா
என வியந்தபடியே, எப்பொழுதும்!

இரண்டு இதயங்கள் எல்லையில்லா
வெளியில் இரு சிறு தீவுகளாக, எப்பொழுதும்!

உன்னையும் என்னையும் ஒன்றாகவே
நான் காண்கிறேன், எப்பொழுதும்!

Sunday, September 21, 2014
Topic(s) of this poem: love
POET'S NOTES ABOUT THE POEM
Hi,
This poem 'எப்பொழுதும்! ' is a translation of an English poem 'forever' by Poetess Leloudia Migdali from Greece.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Dr.V.K. Kanniappan

Dr.V.K. Kanniappan

Madurai, Tamil Nadu, India
Close
Error Success