அந்த நாளும் மீண்டும் வந்திடாதோ Poem by Dr.V.K. Kanniappan

அந்த நாளும் மீண்டும் வந்திடாதோ

சித்திரைத் திருவிழாவுக்கு
சிங்காரிச்சுப் போகும்போது
அங்கே விக்கிற பஞ்சு மிட்டாயை
வாங்கித் தின்ன ஆசையோட
பார்ப்பேன் நான்!

இளஞ்சிவப்பு நிறத்திலே
இங்கிதமாத் திறமையோட
செஞ்சு தரும் அழகான
பஞ்சு மிட்டாய பரவசத்தோட
பார்ப்பேன் நான்!

மயங்கும் மாலைநேரச் சூரியனின்
புசுபுசு இளஞ்சிவப்பு மேகக் கூட்டம்
போன்ற எழில் தோற்றம்
பஞ்சு மிட்டாய் அழகு! அழகு!
என்னே அழகு!

பட்டுப் போன்ற இளஞ்சிவப்பு மேகத்த
தொட்டுப் பார்க்க எப்போதும்
என் நெஞ்சில் ஆசையுண்டு!
மெத்தென்ற அழகான பஞ்சு மிட்டாய்
அதற்கு ஓர் வடிகாலாம்!

சில நொடிகளில் கரைந்து விடும்
அதன் இன்சுவையை இன்ப
மகிழ்வான உவகையோடு
நான் விரும்பி எப்பொழுதும்
உண்பேனே! நான் உண்பேனே!

பஞ்சு மிட்டாயை
உண்ணும் போதெல்லாம்
நேரம் போவதே தெரியாமல்
நீண்ட நேரம் சுவைப்பேனே!
நான் சுவைப்பேனே!

ஆனாலும் பாருங்கள்;
அந்தோ! அந்த மகிழ்வும்
வெகுநேரம் நீடிப்பதில்லை,
எந்த நற்செயல்களும் முடிவுக்கு
வந்துதானே ஆகவேண்டும்!

அந்த நாளும் மீண்டும் வந்திடாதோ
அடுத்த சித்திரைத் திருவிழாவை
ஆவலுடன் எதிர்பார்த்துக்
காத்திருப்போம்! நாம்
காத்திருப்போம்!

அங்கு விற்கும்
பஞ்சு மிட்டாய் அதுவே
என் கண்களுக்கும்
நாவின் சுவை மொட்டுகளுக்கும்
நல் விருந்தாகட்டும்!

Wednesday, September 3, 2014
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
1731 / 1552
Dr.V.K. Kanniappan

Dr.V.K. Kanniappan

Madurai, Tamil Nadu, India
Close
Error Success