என் உள்மனத்திலிருந்து சித்தரிக்கிறேன்! Poem by Dr.V.K. Kanniappan

என் உள்மனத்திலிருந்து சித்தரிக்கிறேன்!

சிதறிய சொற்களை
ஒன்றொன்றாகப் பொறுக்கி
அவற்றை மாயாஜாலப் பெட்டியில் போட்டேன்!

என் ஆன்மாவின் நிறத்தைப் போன்ற
வண்ணக் குழம்பி ஒரு பீப்பாய் அளவு
அதனுள் ஊற்றினேன்!

கொஞ்சம் கருப்பு, கொஞ்சம் நீலம்,
கொஞ்சம் சிகப்பு, சற்று புதிய வண்ணத்திலும் ஒன்று,
மேலும் கீழுமாக நன்றாகவே குலுக்கினேன்!

அப்படியே அவைகளை
சின்னச் சின்னக் கட்டிகளாய்
வெளியே எடுத்து உலர்த்தினேன்!

இரண்டு, மூன்றாக
சிறு சிறு வரிசையாக வைத்து
கற்பனை விளையாட்டாகப் பெயரிட்டேன்!

அவைகள் யாரென,
பல கதாநாயகர்கள், சில வில்லன்கள்,
நீங்க பார்ப்பதுவாக சித்தரிக்கிறேன்!

அவைகளெல்லாம் எங்கிருந்து வருகின்றன?
என்னையே என் உள்மனத்திலிருந்து
சித்தரிக்கிறேன்!

Sunday, August 17, 2014
Topic(s) of this poem: soul
POET'S NOTES ABOUT THE POEM
First Person

Scattering words
I pick them up one by one
Put it into my magic box
Pour a barrel of paint
The same of my soul's color
Sometimes black, sometime blue
May be red or something new
Shake well up and down

Take them out as small blocks
Put them out to dry
Build them into small lines
Two or three, inspired by a theme
They take some shape
Of a Hero (Villain) an imaginary game
What they are, you see
Is what really defines me
Where all these coming from?

Magic Box
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Dr.V.K. Kanniappan

Dr.V.K. Kanniappan

Madurai, Tamil Nadu, India
Close
Error Success