கடவுளின் பலசரக்குக் கடை - நிலைமண்டில ஆசிரியப்பாக்கள் Poem by Dr.V.K. Kanniappan

கடவுளின் பலசரக்குக் கடை - நிலைமண்டில ஆசிரியப்பாக்கள்

வாழ்க்கையின் ராஜபாட் டையில் நான்பல
ஆண்டு களுக்குமுன் நடந்து போகையில்
சொர்க்கத் தின்'பல சரக்கு பண்டக
சாலை' பெயர்ப்பல கைகண் டேனே!

சற்று அருகில் சென்ற போது
கதவுகள் அகலமாக தானாகத் திறந்தன;
உணர்வுக்கு நான்வந்த போது நானங்கே
உள்ளே நின்று கொண்டிருந் தேனே!

தேவதைகள் சிலரங்கே நிற்பதைக் கண்டேன்,
எங்கெங்கும் அவைகள் நின்றுகொண் டிருந்தன!
கூடையை ஒருதேவதை என்கையில் கொடுத்து,
‘மகனே! கவனமாய் வாங்கு‘ என்றதே!

மானிடர்க் குத்தேவை யான அனைத்துமே
அந்த பலசரக்குக் கடையில் இருந்தன;
உன்னால் சுமக்க முடியாத படியிருந்தால்
இன்னும் வாங்க மீண்டும் வரலாமே!

முதலில் கொஞ்சம் 'பொறுமை' வாங்கினேன்
அதேவரி சையில் 'பாசம்' இருந்தது,
அதற்குக் கீழே 'புரிதல்' இருந்தது,
எங்கு சென்றாலும் அவையுனக்கு வேண்டுமே!

ஒன்றிரண்டு பெட்டிகளில் 'ஞானமும்' இன்னும்
இரண்டு பைகளில் 'விசுவாசமும்' வாங்கினேன்
'தர்ம சிந்தனை' கொஞ்சம் தேவையே! அதையும்
கொஞ்சம் பைகளில் வாங்கி னேனே!

'பரிசுத்த ஆவி'யை விட்டுவிட முடியாது,
அதுஅங்கு அனைத்து இடத்திலும் இருக்கிறது;
வாழ்க்கை ஓட்டத் திற்குத் துணையாய்
கொஞ்சம் 'பலமும் துணிவும்' வேண்டுமே!

என், பை நிறைந்து கொண்டிருக் கிறது,
ஞாபகம் வந்தது ‘அருட்கருணை‘ வேண்டும்
‘வீடுபேறு‘ கிடைக்கும் இலவசமே! அதனால்
நானும் ‘வீடுபேறு‘ம் தேர்ந்தெடுத் தேனே!

முதலாளி சொல்லிய வண்ணம் வாங்கிய
சரக்கிற்கு நான்பணம் செலுத்த முகப்பு
சாளரம் சென்றேன்! சென்ற போது
அங்கே ‘இறைவணக்கத்‘ தினைப்பார்த் தேனே!

சரக்குப் பைகளை அங்கே வைத்தேன்,
வெளியே சென்றால் பாபம் செய்வேன்
என்றறிவேன்! கடைசியாய் ‘மகிழ்வும் அமைதி‘யும்
நிறையவே அங்குள்ள மாடத்தில் உள்ளனவே!

‘கீதமும் துதி‘யும் அருகருகில் தொங்கி
நிற்கிறது! நானாக எடுத்துக் கொண்டேன்!
எவ்வளவு நான்தர வேண்டு மென்று
அருகிருந்த தேவதை யைக்கேட் டேனே!

தேவதை சிரித்துக் கொண்டே சொன்னது
‘அவைகளை நீசெல்லு மிடமெல்லாம் எடுத்துச்செல்‘
மீண்டும் தேவதையைக் கேட்டேன் ‘எவ்வளவு
தரணும்? ‘ ‘குழந்தாய்! இதற்கான விலையைக்
கடவுள் உனக்காக எப்பொழுதோ கொடுத்து
விட்டாரே என்று மீண்டும் சொன்னாளே!

Ref: Poem: ‘God's Groceries' by Maria Mons.

பொருள் அகராதி:

Patience - பொறுமை, Love - பாசம்
Understanding - புரிதல், Wisdom - ஞானம்
Faith - விசுவாசம், Charity - தர்ம சிந்தனை
Holy Ghost - பரிசுத்த ஆவி, Strength - பலம்
Courage - துணிவு, Grace - அருட் கருணை
Salvation - வீடுபேறு, Prayer - இறை வணக்கம்
Peace - அமைதி, Joy - மகிழ்வு
Song - கீதம், Praise - துதி

Sunday, June 8, 2014
Topic(s) of this poem: life
POET'S NOTES ABOUT THE POEM
GOD's GROCERIES

As I was walking down life's highway many years ago
I came upon a sign that read Heavens Grocery Store.
When I got a little closer the doors swung open wide
And when I came to myself I was standing inside.
I saw a host of angels. They were standing everywhere.
One handed me a basket and said "My child shop with care."
Everything a human needed was in that grocery store,
And what you could not carry you could come back for more,
First I got some Patience.
Love was in that same row.
Further down was Understanding,
you need that everywhere you go.
I got a box or two of Wisdom and Faith a bag or two.
And Charity of course I would need some of that too.
I couldn't miss the Holy Ghost
It was all over the place.
And then some Strength and Courage
to help me run this race.
My basket was getting full
but I remembered I needed Grace,
And then I chose Salvation
for Salvation was for free
I tried to get enough of that to do for you and me.
Then I started to the counter to pay my grocery bill,
For I thought I had everything to do the Masters will.
As I went up the aisle I saw Prayer and put that in,
For I knew when I stepped outside I would run into sin.
Peace and Joy were plentiful, the last things on the shelf.
Song and Praise were hanging near so I just helped myself.
Then I said to the angel "Now how much do I owe? "
He smiled and said "Just take them everywhere you go."
Again I asked "Really now, How much do I owe? "
"My child" he said, "God paid your bill a long long time ago." - Maria Mons
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Dr.V.K. Kanniappan

Dr.V.K. Kanniappan

Madurai, Tamil Nadu, India
Close
Error Success