என்ன வாகப் போகிறாய்நீ - வஞ்சி விருத்தம் Poem by Dr.V.K. Kanniappan

என்ன வாகப் போகிறாய்நீ - வஞ்சி விருத்தம்

என்ன வாகப் போகிறாய்நீ?
மருத்துவரா, நடனக் கலைஞரா
முத்துக் குளிப்பவரா? அவர்கள்
கேட்பதை நிறுத்தப் போவதில்லை! 1

என்ன வாகப் போகிறாய்நீ?
நான்நானாய் இருப்பதை நிறுத்த
எதிர்பார்க் கிறார்களோ? அவர்கள்
கேட்பதை நிறுத்தப் போவதில்லை! 2

வளரும் பொழுதுநான் தும்மலாய்
இருந்தந்த என்விரோதி களின்மேல்
என்னிடத் திலுள்ள கிருமிகளை
வன்மையாய்த் தெளிக்கப் போகிறேன்! 3

வளரும் பொழுதுநான் தேரையாய்ப்
பிறந்து வந்து வீணரெல்லாம்
கேட்கும் மூளையில்லா கேள்விகளைக்
கூட்டி சாலையில் குவிப்பேன்! 4

வளரும் பொழுதுநான் குழந்தையாகி,
என்ன வாகப் போகிறாய்நீ
என்று கேட்போரைக் கிறுக்காக்கி
முழுநாளும் விளையாட்டுக் காட்டுவேன்! 5

This is a translation of the poem What Will You Be? by Dennis Lee
Sunday, September 6, 2015
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
Ramesh T A 06 September 2015

Without knowledge one cannot say anything by intuition about what one will be in the future!

0 0 Reply
Kanniappan Kanniappan 07 September 2015

Thanks for your nice comment.

0 0
Kaliappan Ezekkial 06 September 2015

மொத்தத்தில் ஒரு போராளியாகப் போகிறீர்கள்!

0 0 Reply
Kaliappan Ezekkial 06 September 2015

மொத்தத்தில் ஒரு போராளியாகப் போகிறீர்கள்!

0 0 Reply
Kaliappan Ezekkial 06 September 2015

அருமை! மொத்தத்தில் போராளியாகப் போகிறீர்கள்!

0 0 Reply
Dr.V.K. Kanniappan

Dr.V.K. Kanniappan

Madurai, Tamil Nadu, India
Close
Error Success